Popular Posts

Thursday, 2 June 2011

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.

No comments:

Post a Comment